சங்ககிரியில் தீரன் சின்னமலை நினைவு தினம் அரசு மரியாதையுடன் அனுசரிப்பு - ஆட்சியர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை
சேலம், 03 ஆகஸ்ட் (ஹி.ச.) சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள தீரன் சின்னமலை நினைவு மண்டபத்தில், மாவீரன் தீரன் சின்னமலையின் நினைவு தினம் இன்று அரசு மரியாதையுடன் வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து வீரத்துடன் போரிட்ட சுத
Dheeran Chinnamalai's memorial day


சேலம், 03 ஆகஸ்ட் (ஹி.ச.)

சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள தீரன் சின்னமலை நினைவு மண்டபத்தில், மாவீரன் தீரன் சின்னமலையின் நினைவு தினம் இன்று அரசு மரியாதையுடன் வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.

ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து வீரத்துடன் போரிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் தியாகத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் அவரது நினைவு தினம் அரசு விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சங்ககிரியில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவீரன் தீரன் சின்னமலையின் திருவுருவப்படத்திற்கு சேலம்மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் தமிழன் பார்த்திபன், விஜயலட்சுமி மற்றும் லோகேஷ் தமிழ்ச் செல்வன் ஆகியோர் தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சுதந்திரப் போராட்ட வீரருக்கு மரியாதை செலுத்தினர்.

Hindusthan Samachar / vidya.b