ஆடிப்பெருக்கு நாளில் அதிரடி தங்கம் விலையில் தடாலடி மாற்றம்!!
சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.) ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாத முதல் நாளிலேயே தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அந்த வகையில் நேற்று முன் தினம், 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35
தங்கம்


சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாத முதல் நாளிலேயே தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

அந்த வகையில் நேற்று முன் தினம், 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.13,220க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,760க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்று தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,250க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,065க்கும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.235க்கும், ஒரு கிலோ ரூ.2,35,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P