Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சேவகானப்பள்ளி கிராமத்தில் பேட்டரிகள் தாயாரிக்கும் எக்ஸைட் என்ற
தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் 700க்கும் மேற்பட்ட
நிரந்தர தொழிலாளர்களும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும்
பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 590
ரூபாய் சம்பளம் ஆகும் மாதம் 14 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம்
வழங்கப்பட்டு வருகிறது.
தங்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்க வேண்டும் என ஒப்பந்த
தொழிலாளர்கள் தொடர்ந்து நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர் அங்கு
பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்களுக்கு சமீபத்தில் சம்பள உயர்வு வழங்கப்பட்டதாக
கூறப்படுகிறது.
அதைப்போல தங்களுக்கும் ஊதிய உயர்வு வேண்டும் என்ற கோரிக்கையை
வலியுறுத்தி இன்று ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சாலை வாயில்
முன்பு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிற்சாலைக்குள் ஒப்பந்த தொழிலாளர்கள் யாரும் பணிக்கு செல்லாததால் இன்று
பணிகள் நடைபெறாமல் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
நிர்வாகம் சார்பில்
பேச்சுவார்த்தைக்கு போராடும் தொழிலாளர்கள் அழைக்கப்பட்டனர் அதே நேரத்தில் அந்த
பகுதிக்கு போராட்டம் குறித்து அறிந்து வந்த பாகலூர் போலீசார் மற்றும்
நிர்வாகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை
நடத்தி வருகின்றனர்.
ஓவர் டைம் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைவான சம்பளமே
வழங்கப்படுவதாகவும் விடுமுறை நாட்களான ஞாயிற்றுக்கிழமைகளிலும் கம்பெனியில்
நிர்வாகம் வேலை வாங்குவதாகவும் அதற்கும் இரட்டை ஊதியம் கொடுப்பதில்லை எனவும்
உணவு உள்ளிட்ட வசதிகளையும் முறையாக செய்து கொடுப்பதில்லை எனவும் வட மாநில
ஒப்பந்த தொழிலாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam