Enter your Email Address to subscribe to our newsletters

ஜம்மு , 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தில் உள்ள அக்னூர் ராணுவ பிரிவில்
பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவர் வைத்திருந்த துப்பாக்கி எதிர்பாராத விதமாக திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது.
இதில் குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்த அவரை சக வீரர்கள் உடனடியாக அக்னூர் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த வீரரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அக்னூர் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சட்டப்பூர்வ நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA