Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டான் கோவில் கிழக்கு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியையை இடைநிலை ஆசிரியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் புவனா, இடைநிலை ஆசிரியை கலைமதி முறையாக பணியாற்றவில்லை என வட்டார கல்வி அலுவலரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையால் ஆத்திரமடைந்த கலைமதி, பள்ளி வகுப்பறையிலேயே மாணவர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியர் புவனாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
ஆசிரியர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அதன் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் கூறுகையில்,
தலைமை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை அறிக்கையின் அடிப்படையில் விரைவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கருநகர் காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் இடையே ஏற்பட்ட இந்த மோதல் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam