Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, திருச்சி அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் புனித நீராட வரும் பக்தர்களின் வசதிக்காக மாநகராட்சி நிர்வாகம் சிறப்பு ஷவர் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி வழிபடுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கர்நாடகத்திலிருந்து காவிரியில் போதிய அளவு தண்ணீர் திறந்துவிடப்படாததால், திருச்சி அம்மா மண்டபம் பகுதியில் ஆறு வறண்ட நிலையில் காணப்படுகிறது.
இதனால், பக்தர்கள் ஏமாற்றமடையாமல் புனித நீராடும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக ஷவர் அமைப்புகளை நிறுவியுள்ளது.
குடிநீர் இணைப்பின் மூலம் இயங்கும் இந்த ஷவர் வசதியில், பக்தர்கள் குளித்து வழிபாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆற்றில் தண்ணீர் இன்றி, ஷவர் மூலம் புனித நீராடும் நிலை ஏற்பட்டிருப்பது, காவிரியின் தற்போதைய நீர்ப்பற்றாக்குறையை வெளிப்படுத்துவதாகவும், கர்நாடகத்திலிருந்து உரிய அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் மீண்டும் வலுப்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ