Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
மதுரையில் வி த லீடர்ஸ் (We The Leaders) அமைப்பின் தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று வைகை நதியை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.
இந்த தூய்மைப் பணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அண்ணாமலை,
ஆகஸ்ட் 1 முதல் 31 ஆம தேதி வரை சுற்றுச்சூழலை மையப்படுத்தி பணிகளை தொடங்கியுள்ளோம்.
ஒரு நாள் வந்தோம் போட்டோ எடுத்தோம் என இருக்க கூடாது. ஒரு நபருக்கு ஒரு மணி நேரம் என ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஓரேநாளில் சுத்தப்படுத்த முடியாது ஆண்டாண்டு குப்பைகள் உள்ளது.
கல்லூரி மாணவர்களை நாடி அவர்களை அழைத்துவர வேண்டும், வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்க முயற்சிக்கிறோம்.
சிங்கப்பூர், துபாய் சென்றால் குப்பை போடமாட்டார்கள். இங்கு குப்பையாக இருப்பதால் குப்பை போடுகிறார்கள்
அரசியல் மேடை போடுவது ஈசி, மைக்கில் பேசலாம் முதலமைச்சர் சரியாக இருக்கிறார், சரியாக இல்லை எனவும் ஒரு மணி நேரம் கூட பேசுவார்கள்.
வாடகை வாயை வைத்துக்கொண்டு பேசுவார்கள் இப்படி தான் போகிறது அரசியல்.
நாம் அப்படி அல்ல; மாற்றம் வேண்டும். ஒரு வருடம் தாருங்கள் வைகை நதியை சுத்தம் செய்து தருகிறோம்.
வைகை நதியில் தண்ணீர் வரும்போது குப்பையை அடித்துசெல்லும் என்கிறார்கள். இங்கு வந்தவர்கள் தொடர்ந்து ஆட்களை அழைத்து வாருங்கள்.
அபிஷேக தீர்த்தம் செல்கிறது. கிணற்றுக்கு அருகே அசுத்தமாக உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தமிழகம் ஆபத்தான நிலையில் உள்ளது 1 லட்சத்து 7ஆயிரம் நீர் நிலைகள் உள்ளது. 50 ஆயிரம் நீர்நிலைகளில் தண்ணீர் இல்லை, நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளில் உள்ளது.
குப்பையையே அகற்றுகிறோம், அனைத்தையும் அகற்றலாம். ஒரு நாளில் மாறுவது அல்ல; மரங்கன்றுகளை நடவேண்டும் எதையும் எதிர்பார்த்து செய்யவில்லை, இயற்கைகாக செய்கிறோம்.
கடும் வெயிலாக இருந்தால் பணி செய்ய வேண்டாம் முதியவர்கள் முடிந்தவரை பணி செய்தால் போதும். கல்லூரி மாணவர்கள் எங்கெங்கோ செல்கிறார்கள். அவர்களை வைத்து தூய்மை பணிகளை மேற்கொள்ளுங்கள்.
மேடை போட்டால் நிறைய பேர் வருவார்கள் ஆனால் களத்தில் நிற்க வேண்டும் என்று பேசினார்.
Hindusthan Samachar / ANANDHAN