Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்த கார், மேலூர் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சாலையின் நடுவே இருந்த தடுப்பைத் தாண்டி எதிர்புற சாலைக்குள் புகுந்த கார், எதிரே வந்த மற்றொரு கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் இரண்டு கார்களும் பலத்த சேதமடைந்ததுடன், அதில் பயணித்த பெண் குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், கார்களில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
விபத்துக்கான காரணம் குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ