Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உயர் ஜவுளி தொழில்நுட்ப பூங்கா செயல்பட்டு வருகின்றது. இப்பூங்காவில் இயங்கி வரும் ஒரு ஜவுளி நிறுவனத்தில் மின் கசிவு காரணமாக இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமளவென பரவி அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த நூல்கள், துணிகள் மற்றும் விலை உயர்ந்த இயந்திர உதிரி பாகங்கள் என அனைத்தையும் சூழ்ந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
எனினும் இந்த தீ விபத்தில் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஜவுளி பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b