முதல்வராக விஜய் பொறுப்பு ஏற்ற பின்னர் ஆடி பெருக்கு விழாவில் காவிரி ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது - அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு, 03 ஆகஸ்ட் (ஹி.ச.) சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையில் 221-நினைவு நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஊரான ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்
Sengottaiyan


ஈரோடு, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையில் 221-நினைவு நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஊரான ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜய பாலாஜி, கமலி, விஜயலட்சுமி, லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

முதன் முதலில் முன்னாள் முதல்வர் அம்மா 1992ம் ஆண்டு தீரன் சின்னமலை வரலாற்று புத்தகம் வெளியிட்டு மணி மண்டபத்தை அமைத்தார்.

தவெக தலைவர் விஜய் ஒவ்வொரு தலைவருக்கும் பிறந்தநாள் நினைவுச் நாளில் சிறப்பு உருவாக்க வேண்டும் நோக்கத்துடன் என்ற அடிப்படையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முதல்வராக விஜய் பொறுப்பு ஏற்ற பின்னர் ஆடி பெருக்கு விழாவில் காவிரி ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது,அணைகளும் நிரம்பும் நிலை எட்டவுள்ளது.

இதற்கு நல்லவர் ஆட்சியில் இருந்தால் அமையும் எடுத்துகாட்டாக உள்ளது இந்தியாவில் முன்மாதிரியாக தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

தீரன் சின்னமலை நினைவு நாள் அரசு விழாவாக கொண்டாடுவதற்கு அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN