Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் போராடிய மாணவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய உத்தரவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் தவறானது என்று தமிழக வெற்றிக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது தவெக அரசு வழக்குத் தொடுத்தது.
அந்த வழக்குகளை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது என்ற தகவல் முற்றிலும் பொய்யானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிரான போராட்டங்களில் 18 வயதுக்குக் கீழ் உள்ள மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தால் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் புலனாய்வைத் தொடரலாம் என்றும் மட்டுமே உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாகவும், வழக்குகளை ரத்து செய்ய எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் விளக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை, மாணவர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசே தன்னிச்சையாக ரத்து செய்துள்ளதாகவும், அதற்கான உத்தரவை முதலமைச்சர் வழங்கியுள்ளதாகவும் தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
உண்மை விவரங்களை அறியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்த வேண்டும் என்றும் அக்கட்சி தனது பதிவில் வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P