Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
டெல்லியில் கடந்த ஜூலை
20-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் இன்று நாடாளுமன்றத்தின் மகர் துவார் வாயிலில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.
ராமர் கோயில் நன்கொடை திருட்டு தொடர்பான குற்றச்சாட்டையும் எதிர்க்கட்சிகள் எழுப்பவுள்ளன.
கடந்த வாரம் பூர்ணியா எம்.பி. பப்பு யாதவ், ராமர் கோயில் நன்கொடை திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக அரசை விமர்சிக்கும் வகையில், பூசாரி போல நடித்து நன்கொடை வசூலித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.
நேற்று டெல்லியில் பப்பு யாதவ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவது இந்த விவகாரத்திற்கு கூடுதல் முக்கியத்துவத்தை அளித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் பதினோராவது நாளான இன்று நடைபெறும் இந்த போராட்டத்தின் போது, மத்திய அரசு வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதாவை (எப்.சி.ஆர்.ஏ. திருத்த மசோதா) தாக்கல் செய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
Hindusthan Samachar / vidya.b