பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி விவகாரம் - மேலும் இருவர் சஸ்பெண்ட்
திண்டுக்கல், 03 ஆகஸ்ட் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, சுமார் 1 ஏக்கர் 40 சென்ட் பரப்பளவிலான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், மேலும் இரண்டு பேரை பணியிடை ந
Pand


திண்டுக்கல், 03 ஆகஸ்ட் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, சுமார் 1 ஏக்கர் 40 சென்ட் பரப்பளவிலான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், மேலும் இரண்டு பேரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து பத்திரப்பதிவுத் துறை உத்தரவிட்டு உள்ளது.

இதன்படி, பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய அலுவலக உதவியாளர் சிவசங்கரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

மேலும், கடந்த ஜூலை 3-ஆம் தேதி இந்த நிலத்தின் பத்திரப்பதிவு செயல்முறையை தொடங்கி வைத்ததாகக் கூறப்படும் சார்பதிவாளர் பாலசந்தரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது மேலும் இரண்டு அதிகாரிகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நில மோசடி தொடர்பாக பத்திரப்பதிவுத்துறை மற்றும் விசாரணை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN