Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வரும் 700 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அரசாணையில்,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) உதவி பொறியாளர்களாக பணியாற்றி வந்தவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக பதவி உயர்வுக்காக காத்திருந்த உதவி பொறியாளர்கள், தற்போது உதவி செயல் பொறியாளர்களாக
(Assistant Executive Engineer) பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
பதவி உயர்வு பெற்றுள்ள 700 பேருக்கும் உடனடியாக பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மின் பகிர்மான வட்டங்களுக்கு அவர்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்வாரிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் மூலம் மின்வாரியத்தின் நிர்வாக பணிகள் மேலும் விரைவுபடுத்தப்படும் என்றும், பொதுமக்களுக்கான சேவைகள் மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b