இன்று ரயில்வே தேர்வு - தேர்வர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கம்
சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.) ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் குரூப் டி பணிகளுக்கான கணினி வழித் தேர்வு இன்று (ஆகஸ்ட் 3, 2026) தொடங்குகிறது. இந்திய ரயில்வேயில் உள்ள ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப இந்த மாபெரும் வேலைவாய்ப்புத் தேர்வு நடத்த
நாடு முழுவதும்  இன்று ரயில்வே தேர்வு - தேர்வர்கள் வசதிக்காக  சிறப்பு ரயில்கள் இயக்கம்


சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)

ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் குரூப் டி பணிகளுக்கான கணினி வழித் தேர்வு இன்று (ஆகஸ்ட் 3, 2026) தொடங்குகிறது.

இந்திய ரயில்வேயில் உள்ள ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப இந்த மாபெரும் வேலைவாய்ப்புத் தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான தேர்வர்கள் இந்தத் தேசிய அளவிலான தேர்வில் பங்கேற்கின்றனர்.

ஆகஸ்ட் 21-ம் தேதி வரை பல்வேறு மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில் ரயில்வே வாரியத் தேர்வை முன்னிட்டு தேர்வர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக தூத்துக்குடி - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி இன்று முதல் வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில் தூத்துக்குடியில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு காலை 6.40 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பை சென்றடையும்.

ரயில்வே தேர்வு காரணமாக வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், பயணிகள் நெரிசலைத் தவிர்க்கவும், தேர்வர்கள் சரியான நேரத்தில் தேர்வு மையங்களை அடையவும் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முன்பதிவில்லா சிறப்பு ரயிலை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b