Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வீரத்துடன் போராடி, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக உயிரைத் தியாகம் செய்த மாவீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவின் மூலம் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
ஆங்கிலேய ஆட்சியைத் துணிச்சலுடன் எதிர்த்து, தாய்நாட்டின் விடுதலைக்காக தனது இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர் தீரன் சின்னமலைக்கு தங்களது அஞ்சலியை செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அடிமைத்தனத்திற்கு ஒருபோதும் தலைவணங்காத மனஉறுதியும், தாய்நாட்டின் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத பற்றும், எதிரிகளை அச்சுறுத்திய போர்த்திறனும் தீரன் சின்னமலையின் தனித்துவ அடையாளங்களாக விளங்குகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
தலைமுறைகள் கடந்தும் தீரன் சின்னமலையின் வீரமும் தியாகமும் என்றும் போற்றப்படும் என்றும், அவரது தேசப்பற்று மற்றும் விடுதலைப் போராட்ட வரலாறு இன்றைய இளைஞர்களுக்கு உத்வேகமாக திகழ்கிறது என்றும் அண்ணாமலை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ