திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு - தமிழக அரசை விமர்சித்த பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி. செல்வம்
தமிழ்நாடு, 03 ஆகஸ்ட் (ஹி.ச.) திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், எந்தவொரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என உச்ச
வினோஜ் செல்வம்


தமிழ்நாடு, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், எந்தவொரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதாகக் கூறி, பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி. செல்வம் தமிழக அரசை விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,

சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலுக்காக திமுக தொடங்கிய அரசியல் அணுகுமுறையை தற்போதைய தமிழக அரசும் தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.

மேலும், இந்துக்களின் உண்டியல் நிதியை பயன்படுத்தி அறநிலையத்துறை மூலம் இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த நிலை நீண்ட காலம் நீடிக்காது என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam