நடிகர் தனுஷ் தனது இரண்டு மகன்களுடன் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம்
திருவண்ணாமலை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.) பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், திரைப்பட நடிகர்கள், நடிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் திரு
Dhanush


திருவண்ணாமலை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், திரைப்பட நடிகர்கள், நடிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை வழிபட்டு கோவில் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று திருவண்ணாமலைக்கு வருகை தந்த திரைப்பட நடிகர் தனுஷ் தனது இரண்டு மகன்கள் உடன் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக அதிகாலையில் நடைபெற்ற கோ பூஜையில் கலந்துகொண்டு பசு மாட்டிற்கு அகத்திக் கீரையை வழங்கினார்.

அதனை தொடர்ந்து சம்பந்த விநாயகரை வணங்கி வழிபட்டவர், தொடர்ந்து உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையாரை வழிபாடு செய்தனர், பின்னர் வைகுந்த வாயில் அருகே நின்று தீபமலையை வழிபட்டார்.

கோவில் நிர்வாகம் சார்பில் சிவாச்சாரியார்கள் மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.

தொடர்ந்து அண்ணாமலையார் கோவிலில் முன்பு உள்ள கொடிமரம் அருகே சாஷ்டாங்கமாக விழுந்து தரிசனம் செய்தார்.

கோவிலுக்கு வருகை தந்த நடிகர் தனுசு உடன் கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் அவரது ரசிகர்கள் புகைப்படம் மற்றும் செலுத்தி எடுத்து மகிழுந்தனர்.

திருவண்ணாமலையில் கடந்த 3 தினங்களாக நடிகர் தனுஷ் நடிக்கும் ஓம் திரைப்படம் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இன்று தனது இரண்டு மகன்கள் உடன் நடிகர் தனுஷ் அருணாசலேஸ்வரர் கோவிலில கோ பூஜையில் கலந்து கொண்டு பின்னர் அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

Hindusthan Samachar / ANANDHAN