Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
சுதந்திரப் போராட்ட வீரரும், கொங்கு மண்டலத்தின் வீரத்தின் அடையாளமாக திகழ்ந்தவருமான மாவீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது.
கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு அமைச்சர்கள் ஆனந்த், ராஜ்மோகன், குமார் உள்ளிட்டோர் வருகை தந்து மாலை அணிவித்து, மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
அவர்களுடன் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர்கள்,
ஆங்கிலேயர்களுக்கு வரி கொடுக்க மறுத்து, 'சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையே உள்ள கொங்கு நாட்டை ஆள்வது நாங்கள்தான்' என்று முழங்கியவர் தீரன் சின்னமலை என்றும், அவரது வீரமும், தேசப்பற்றும் இன்றைய இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து தீரன் சின்னமலை நடத்திய போராட்டங்களும், அவர் கட்டமைத்த படைபலமும் வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இந்த மரியாதை நிகழ்ச்சியை முன்னிட்டு சிலை அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
ஏராளமான பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் திரண்டு வந்து தீரன் சின்னமலை சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
Hindusthan Samachar / vidya.b