Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன், கோடகன் கால்வாயில் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது.
கால்வாயில் தண்ணீர் அதிகளவில் சென்று கொண்டிருந்த நிலையில், நீச்சல் தெரியாததால் அவர் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். உடன் குளித்தவர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு சிறுவனின் உடலை மீட்டனர்.
பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தாமிரபரணி ஆறு, பிரதான கால்வாய்கள் மற்றும் உபரி நீர் கால்வாய்களில், ஆழம் தெரியாமல் இறங்கும் இளைஞர்களும் சிறுவர்களும் விபத்துகளில் சிக்குவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
எனவே கால்வாய்கள், ஆறுகளில் குளிக்கச் செல்லும் சிறுவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குளிக்கச் சென்ற16 வயது சிறுவன் கண்ணன் கால்வாயில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b