Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திர முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அம்பதி ராமபாபு, இதய பாதிப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு மருத்துவர்கள் இதயத்தில் 2 ஸ்டென்ட்களை பொருத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியுமான ஜெகன் மோகன் ரெட்டி, அம்பதி ராமபாபுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி
அப்போது அம்பதி ராமபாபு, தனக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு இதயத்தில் 2 ஸ்டென்ட்கள் பொருத்தப்பட்டதாகவும் ஜெகனிடம் தெரிவித்தார்.
அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் சிறப்பான சிகிச்சை அளித்து வருவதாகவும், தற்போது தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், விரைவில் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படுவேன் என்றும், இன்னும் ஓரிரு நாட்களில் சத்தெனப்பள்ளிக்கு திரும்புவேன் என்றும் அம்பதி ராமபாபு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA