Enter your Email Address to subscribe to our newsletters

ஊத்துக்கோட்டை , 30 ஆகஸ்ட் (ஹி.ச)
பெரியபாளையத்தில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் கோயிலுக்கு சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் வருகை தருகின்றனர்.
அவர்கள் சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, மொட்டையடித்து, வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம் வந்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.
இந்நிலையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையதுறை ஆணையரின் உத்திரவின்படி, பவானி அம்மன் கோயிலில் வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி செவ்வாய் கிழமை முதல் கோயிலின் புனித தன்மை ஒழுங்கு மற்றும் அமைதியான சூழலை பேணும் வகையில் கோயிலுக்குள் கைபேசிகள் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது கைபேசிகளை பாதுகாப்பாக வைத்துச்செல்ல வசதியாக பக்தர்கள் வரிசை மண்டபத்தில் கைப்பேசி பாதுகாப்பு மையம் அமைக்கப்படவுள்ளது.
இந்த மையத்தில் ரூ.5 கட்டணமாக செலுத்தி தங்களது கைப்பேசிகளை ஒப்படைத்து விட்டு டோக்கன் பெற்றுக்கொண்டு, தரிசனம் முடிந்தவுடன் டோக்கனை காண்பித்து செல்போனை பொற்றுக்கொள்ளவும்.
இந்த உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் துணை ஆணையர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b