Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலுமே ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பு பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் தற்போது குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்த வண்ணம் உள்ள நிலையில், குற்றால அருவிகளானது சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தால் களைகட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN