Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஆகஸ்ட் (ஹி.ச)
பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டும், வார இறுதி நாட்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், போத்தனூர் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் சேவைகள் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
போத்தனூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் வரும் செப்டம்பர் 4-ம் தேதி முதல் செப்டம்பர் 27-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
பண்டிகை காலம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சென்னைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவர்களின் பயணத்தை எளிதாக்கும் நோக்கில் மொத்தம் 12 சிறப்பு ரயில் சேவைகளை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த நீட்டிப்பு கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பயணிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b