மீன்கள் வரத்து அதிகரிப்பால் தூத்துக்குடியில் மீன்கள் விலை குறைவு
தூத்துக்குடி, 30 ஆகஸ்ட் (ஹி.ச.) தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப்படகுகள் நேற்று இரவு கரை திரும்பின. இதில் மீனவர்களின் வலைகளில் தோல்பாறை உள்ளிட்ட மீன்கள் அ
Fish prices drop in Thoothukudi due to increased supply.


தூத்துக்குடி, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப்படகுகள் நேற்று இரவு கரை திரும்பின.

இதில் மீனவர்களின் வலைகளில் தோல்பாறை உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் கிடைத்தன. இதனால் மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகளவில் திரண்டனர்.

குறிப்பாக மீன் விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகள் இங்கு கூடை கூடையாக மீன்களை வாங்கி செல்கின்றனர். உணவகங்களுக்கு பெரிய வகை மீன்கள் வாங்க குவிந்தவர்கள் சிறிய மீன்களால் ஏமாற்றம் அடைத்தனர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று, அதிகாலை முதலே மீன் பிரியர்களின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

இன்று காலை நிலவரப்படி சந்தையில் தோல்பாறை மீன் கிலோ ரூ.220, வாளை மீன் ரூ.450, பாறை மீன் ரூ.400, ஊளி மீன் ரூ.350, நண்டு ரூ.750, சீலா மீன் ரூ.850-க்கும் விற்பனையானது. சாளை மீன் ஒரு கூடை ரூ.1,500-க்கு விற்பனையானது.

நீண்ட நாட்களுக்குப் பின் மீன்களின் விலை கணிசமாகக் குறைந்ததால் பொதுமக்கள் ஆர்வத்துடன் மீன்களை வாங்கிச் சென்றனர்.

Hindusthan Samachar / vidya.b