Enter your Email Address to subscribe to our newsletters

தர்மபுரி, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து, இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக பதிவாகியுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் காரணமாக, கடந்த 5 நாட்களாக படிப்படியாக குறைந்து வந்த நீர்வரத்து, கடந்த இரு நாட்களாக 6,500 கன அடியாக நீடித்தது. நேற்று 7,500 கன அடியாக அதிகரித்த நிலையில், இன்று மேலும் அதிகரித்து 10 ஆயிரம் கன அடியை எட்டியுள்ளது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் ஐந்தருவி, சினி ஃபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இதனிடையே, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள தடை, தொடர்ந்து 15-வது நாளாக நீடித்து வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam