நாடு முழுவதும் நீட் முதுநிலை தேர்வு தொடங்கியது - 2.73 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவ பட்டதாரிகள் பங்கேற்பு
சென்னை, 30 ஆகஸ்ட் (ஹி.ச) MD, MS உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதித் தேர்வான நீட் முதுநிலை (NEET-PG) 2026 தேர்வு இன்று நாடு முழுவதும் தொடங்கியது. தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் இந்தத்
Neet


சென்னை, 30 ஆகஸ்ட் (ஹி.ச)

MD, MS உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதித் தேர்வான நீட் முதுநிலை

(NEET-PG) 2026 தேர்வு இன்று நாடு முழுவதும் தொடங்கியது.

தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் இந்தத் தேர்வு, கணினி அடிப்படையில் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 2.73 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவ பட்டதாரிகள் நீட் முதுநிலை தேர்வை எழுதுவதற்காக பதிவு செய்துள்ளனர்.

தேர்வு இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது. தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் காலை 7 மணிக்கே தேர்வு மையங்களுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. காலை 8.30 மணியுடன் தேர்வு மையங்களுக்குள் நுழைவதற்கான அனுமதி நிறைவடைந்தது.

இந்த ஆண்டு நீட் முதுநிலை தேர்வில் மொத்தம் 180 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. தேர்வை எழுதுவதற்கு மொத்தம் 3 மணி நேரம் 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், கேள்வித்தாள் 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 42 நிமிடங்கள் என தனித்தனியாக நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு பிரிவுக்கான நேரம் முடிந்தவுடன், அந்தப் பகுதியை மீண்டும் திறந்து கேள்விகளுக்குப் பதிலளிக்கவோ அல்லது ஏற்கனவே அளித்த பதில்களை மாற்றவோ முடியாது என்ற நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான முக்கிய நுழைவுத் தேர்வாக நீட் முதுநிலை தேர்வு கருதப்படும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் பலத்த ஏற்பாடுகளுடன் தேர்வு நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ