இந்திய பங்குச்சந்தையில் குவிந்த வெளிநாட்டு முதலீடு – ஆகஸ்டில் ரூ.30,919 கோடி முதலீடு
புதுடெல்லி, 30 ஆகஸ்ட் (ஹி.ச.) இந்திய பங்குச்சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPI) இந்திய பங்குகளில் ரூ.30,919 கோடியை முதலீடு செய்துள்ளத
பங்குச் சந்தை


புதுடெல்லி, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)

இந்திய பங்குச்சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPI) இந்திய பங்குகளில் ரூ.30,919 கோடியை முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நிகர முதலீடு தொடர்ந்து இரண்டாவது மாதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்திலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் ரூ.20,200 கோடியை இந்திய பங்குகளில் முதலீடு செய்திருந்தனர்.

2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் அதிக அளவில் விற்பனை செய்திருந்த நிலையில், தற்போது மீண்டும் முதலீடு அதிகரித்திருப்பது இந்திய பங்குச்சந்தை மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை திரும்பி வருவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே, வரும் வாரத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி தரவுகள் வெளியாக உள்ள நிலையில், பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் கவனம் அதன் மீதும், சர்வதேச சந்தை நிலவரம், கச்சா எண்ணெய் விலை மற்றும் வெளிநாட்டு முதலீட்டு வரத்து ஆகியவற்றின் மீதும் திரும்பியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P