பெட்ரோல் பங்க் மீது கையெறி குண்டு வீச்சு -
இம்பால் , 30 ஆகஸ்ட் (ஹி.ச.) மணிப்பூர் மாநிலம் தொபால் மாவட்டம் கான்கொபாக் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் மீது மர்ம நபர் ஒருவர் கையெறி குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரில் வந்த அந்த நபர், பெட்ரோல் பங்க் மீது கைய
A


இம்பால் , 30 ஆகஸ்ட் (ஹி.ச.)

மணிப்பூர் மாநிலம் தொபால் மாவட்டம் கான்கொபாக் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் மீது மர்ம நபர் ஒருவர் கையெறி குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரில் வந்த அந்த நபர், பெட்ரோல் பங்க் மீது கையெறி குண்டை வீசிவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

கையெறி குண்டு விழுந்த இடத்தில் தீப்பற்றியதால், அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.

இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், பெட்ரோல் பங்க் மீது கையெறி குண்டு வீசிய மர்ம நபர் யார்? எதற்காக இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கையெறி குண்டு வீச்சு சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA