Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஆகஸ்ட் (ஹி.ச)
சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள காரம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வேண்டாவராசி அம்மன் நூதன ஆலய அஷ்டபந்தன ஸ்ரீ மகா கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இதில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் கலந்துகொண்டு அம்மனை மனம் உருகி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
புதிதாக அமைக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வேண்டாவராசி அம்மன் ஆலயத்தின் அஷ்டபந்தன ஸ்ரீ மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கோயில் வளாகம் முழுவதும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு ஹோமங்களுக்குப் பின்னர், புனித நீர் கலசங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்துக்கு, கோயில் நிர்வாகத்தின் சார்பில் பூர்ணகும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கோயிலில் வைக்கப்பட்டிருந்த புனித கலசங்களை அமைச்சர் ஆனந்த் தரிசனம் செய்தார். பின்னர் கருவறைக்குச் சென்று, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ வேண்டாவராசி அம்மனை மனம் உருகி வழிபட்டார்.
அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனையிலும் அமைச்சர் ஆனந்த் பங்கேற்றார்.
அப்போது பொதுமக்கள் நலன், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் அனைவரின் நல்வாழ்வுக்காக அவர் அம்மனை வேண்டிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோயில் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் திரளாக பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
பக்தர்கள் அனைவரும் அம்மனின் அருளாசியைப் பெற்று மகிழ்ச்சியுடன் சென்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ