Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருநெல்வேலி பெருமாள்புரத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், சட்டமன்றத்தில் நடைபெறும் காட்சிகள் வேதனை அளிப்பதாகவும், வாக்களித்த பொதுமக்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டாம் என மக்கள் புறக்கணித்துவிட்டதாகவும், அதனை நேரடியாகக் கூற முடியாமல், ராகுல் காந்திக்கு பிரதமராகும் ஆசை இல்லை என அவரது எம்.பி.க்கள் கூறி வருவதாகவும் நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.
ராகுல் காந்திக்கு இந்தியாவை விட இத்தாலி மீது அதிக பாசம் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து, நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் பிரதமர் நேரடியாக ஈடுபட்டு, மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் இருந்து நேபாளம் சென்ற பலர் தங்களது உடைமைகளை இழந்துள்ளதாகவும், பாஸ்போர்ட்டை இழந்த தமிழர்களுக்கு அவற்றை அவர்களது வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்க மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P