Enter your Email Address to subscribe to our newsletters

அசாம், 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளத்தில் சிக்கிய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
நேபாளத்தில் பத்திரமாக மீட்கப்பட்ட அசாமைச் சேர்ந்த 8 பேரிடம் தான் தொலைபேசியில் பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.
பங்கஜ் வர்மா, சமர் பெஸ்பருவா, கவுதம் தாஸ், கோபால் தேப்நாத், சோனேஸ்வர் நர்சாரி, சர்பிசன் மராக், சில்வா மராக் மற்றும் எல்பிசன் சங்மா ஆகிய 8 பேரும் பத்திரமாக இருப்பதாகவும், அவர்கள் நாளை சொந்த ஊர் திரும்புவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நேபாளத்தில் இன்னும் காணாமல் போன அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவர்களைப் பத்திரமாக மீட்டு சொந்த ஊர் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P