Enter your Email Address to subscribe to our newsletters

கும்பகோணம், 30 ஆகஸ்ட் (ஹி.ச)
நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கிய கும்பகோணத்தைச் சேர்ந்த பயணிகள் உள்பட மாயமான அனைவரும் பாதுகாப்பாக மீண்டு வர வேண்டியும், வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டியும் கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் இன்று காலை சிறப்புத் திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது.
நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ஆன்மீகச் சுற்றுலாவிற்காக நேபாளம் சென்ற கும்பகோணத்தைச் சேர்ந்த பயணிகள் உட்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமானதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, வெள்ளத்தில் சிக்கியுள்ள கும்பகோணம் பயணிகள் மற்றும் மாயமான அனைவரும் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தங்களது வீடுகளுக்கு பத்திரமாக திரும்ப வேண்டும் என்ற நோக்கில் கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.
மேலும், நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த பொதுமக்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டியும் திருப்பலியில் பிரார்த்தனை செய்யப்பட்டது.
வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்கள் விரைந்து கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என மனமுருகி வேண்டுதல் நடத்தப்பட்டது.
இந்த சிறப்புத் திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது, நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள அனைவரும் விரைவில் மீட்கப்பட்டு பாதுகாப்பாக தாயகம் திரும்ப வேண்டும் என கூட்டுப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
கும்பகோணத்தைச் சேர்ந்த பயணிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கவலையுடன் உள்ள நிலையில், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீண்டு வர வேண்டும் என்ற பிரார்த்தனை பேராலயத்தில் ஒலித்தது.
Hindusthan Samachar / P YUVARAJ