கேளம்பாக்கம் மயானத்தில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை - கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
சென்னை, 30 ஆகஸ்ட் (ஹி.ச) சென்னை புறநகர் கேளம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது (வயது 29) மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், பிரபல ரவுடியாக வலம் வந்ததாகவும் போலீ
Notorious rowdy hacked to death at Kelambakkam cremation ground


சென்னை, 30 ஆகஸ்ட் (ஹி.ச)

சென்னை புறநகர் கேளம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது

(வயது 29) மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், பிரபல ரவுடியாக வலம் வந்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கேளம்பாக்கத்தில் உள்ள மயான வளாகத்திற்குள் சாகுல் ஹமீது ரத்த வெள்ளத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் பல்வேறு கோணங்களில் சந்தேகம் எழுந்துள்ளது. சாகுல் ஹமீதை மர்ம கும்பல் ஒன்று கடத்தி வந்து மயானத்தில் வைத்து வெட்டிக் கொலை செய்ததா அல்லது உடன் இருந்த நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தலைமறைவாக உள்ள கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b