Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமியின் மனைவி விருதாம்பாள்
இவர் நேற்று மாலை தனது கம்பு வயலுக்குச் சென்றுள்ளார்.
அங்கு பயிர்களைப் பார்வையிடவும், குருவிகளை விரட்டவும் சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவரது ஐந்து மகள்களும், உறவினர்களும் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர்.
அப்போது, இன்று காலை விருதாம்பாள் தனது கம்பு வயலில் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மூதாட்டி அணிந்திருந்த தாலி, செயின், கொலுசு, மூக்குத்தி உள்ளிட்ட நகைகள் காணாமல் போயிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், நகைக்காக மர்ம நபர்கள் மூதாட்டியை தாக்கிக் கொலை செய்துவிட்டு நகைகளை திருடிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டி நகைக்காக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P