Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே நங்கவள்ளி பகுதியைச் சேர்ந்த அமுதா (45), தனது வீட்டில் நிலக்கடலை உரிக்கும் இயந்திரம் வைத்து வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை இயந்திரத்தில் இருந்து அதிக சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அமுதா இயந்திரத்தை எட்டிப் பார்த்தபோது, எதிர்பாராத விதமாக இயந்திரத்திற்குள் தவறி விழுந்துள்ளார்.
இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நங்கவள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அமுதாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நங்கவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P