Enter your Email Address to subscribe to our newsletters

புவனேஸ்வர், 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவால் 2024 டிசம்பரில் தொடங்கப்பட்ட 'சண்டேஸ் ஆன் சைக்கிள்' முன்முயற்சி, இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால், இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, இந்தியன் ரோப் ஸ்கிப்பிங் கூட்டமைப்பு, யோகாசன பாரத், ராஹ்கிரி அறக்கட்டளை, MY பைக்ஸ் மற்றும் MY பாரத் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த சைக்கிள் பேரணியானது, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும், இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல மையங்கள், தேசிய சிறப்பு மையங்கள், SAI பயிற்சி மையங்கள், கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்கள் மற்றும் கேலோ இந்தியா மையங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் தேசிய விளையாட்டு தின கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்வாக புவனேஸ்வரில் இன்று நடைபெற்ற 'சண்டேஸ் ஆன் சைக்கிள்' நிகழ்ச்சியில் ஒடிசா மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் சேவைகள் துறை அமைச்சர் சூர்யபன்ஷி சூரஜ் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சூர்யபன்ஷி சூரஜ்,
தேசிய விளையாட்டு தின கொண்டாட்டங்கள் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகின்றன. இன்று அதன் நிறைவு நாள்.
சீரற்ற வானிலை மற்றும் கனமழை இருந்தபோதிலும், ஒடிசா அரசும், எங்கள் விளையாட்டுத் துறையும் 'சண்டேஸ் ஆன் சைக்கிள்' திட்டத்தை மிகுந்த உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் தொடர முடிவு செய்தோம்
என்று அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b