Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆசிரியர் தின கொண்டாட்டம் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு விழா, இன்ஃப்ளூயன்சர் புதிய பாடத்திட்டத்தின் தொடக்க விழா என முப்பெரும் விழாவாக சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் அமைந்துள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, பள்ளிக்கரணை மாவட்ட காவல் உதவி ஆணையர் எஸ். ஜான் விக்டர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
HCAS நிறுவன இயக்குநர் டாக்டர். சூசன் வர்கீஸ், இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
மேலும்,கல்லூரி நிர்வாகம் மற்றும் உயர் கல்வித் துறையைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக HCAS இன் 30 ஆண்டு கால பயணத்தை விவரிக்கும் வகையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.
அத்துடன் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பை பாராட்டும் வகையில் விருதுகளும் வழங்கப்பட்டு சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் கௌரவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், இந்நிகழ்வின் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த கொண்டாட்டங்கள் அனைத்தும் உயர்கல்வி ,மாணவர் திறமை, படைப்பாற்றல், தலைமைத்துவம்,வளர்ந்து வரும் டிஜிட்டல் திறன்கள், ஆகியவற்றின் மீது கொண்டுள்ள எல்லைகளற்ற ஈடுபாட்டை பிரதிபலிக்கின்றன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA