Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
தெலங்கானா காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் உள்கட்சி விவகாரங்கள் குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் மகேஷ் குமார் கவுட் முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
முனுகோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோமட்டிரெட்டி ராஜகோபால் ரெட்டிக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது உண்மைதான் என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து மகேஷ் குமார் கவுட் தனது அறிக்கையில் கூறுகையில்,
ராஜகோபால் ரெட்டிக்கு அமைச்சர் பதவி வழங்குவது தொடர்பாக ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில அரசியல் சமன்பாடுகள் காரணமாக பதவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அரசியலில் பொறுமை மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சிக்குள் நிலவி வரும் அதிருப்திகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் குறித்தும் அவர் பேசினார்.
காங்கிரஸ் கட்சி ஒரு பெருங்கடல் போன்றது என்றும், அதில் தலைவர்கள் தங்களுடைய கருத்துகளை சுதந்திரமாக தெரிவிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார். அதேநேரத்தில், கட்சி ஒழுக்கத்தையும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கட்சியில் நிலவும் சிறிய அளவிலான அதிருப்திகள், தலைவர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் மற்றும் நியமனப் பதவிகளை நிரப்புவது உள்ளிட்ட அனைத்து விவகாரங்களுக்கும் செப்டம்பர் மாதத்திற்குள் தீர்வு காணப்படும் என்றும் மகேஷ் குமார் கவுட் நம்பிக்கை தெரிவித்தார்.
அமைச்சர்கள் கொண்டா சுரேகா, சின்னாரெட்டி உள்ளிட்டோர் தொடர்பான சர்ச்சைகள் குறித்து கேட்கப்பட்டபோது, அந்த விவகாரங்களை கட்சி மேலிடம் கவனித்து வருவதாக அவர் கூறினார்.
கட்சிக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட தலைவர்கள் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அவற்றுக்கு தீர்வு காண்பார்கள் என்றும் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA