திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர் - 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
திருவண்ணாமலை, 30 ஆகஸ்ட் (ஹி.ச.) பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையி
Thiru


திருவண்ணாமலை, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தனர்.

தமிழகத்தின் முக்கிய சிவாலயங்களில் ஒன்றாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் விளங்கி வருகிறது. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு இன்று காலை முதலே திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது.

நேரம் செல்லச் செல்ல பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்ததால், கோயிலில் நீண்ட வரிசை காணப்பட்டது.

சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தனர்.

கோயிலுக்கு வந்த பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

குறிப்பாக, வெயில் மற்றும் அனலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பக்தர்கள் காத்திருக்கும் பகுதிகளில் பிரம்மாண்டமான மின்விசிறிகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை ஏற்பாடுகளும் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தன.

பக்தர்கள் அதிக அளவில் குவிந்திருந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன.

குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரம் காத்திருந்த போதிலும், அண்ணாமலையாரை தரிசனம் செய்த பக்தர்கள் மனநிறைவுடன் கோயிலில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ