ஜி.கே. மூப்பனாரின் நினைவு தினம் - நினைவிடத்தில் தலைவர்கள் புகழஞ்சலி
சென்னை, 30 ஆகஸ்ட் (ஹி.ச) மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 25-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் நேரில்
Today marks the death anniversary of G.K. Moopanar


சென்னை, 30 ஆகஸ்ட் (ஹி.ச)

மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 25-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் நேரில் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனத் தலைவரும், அகில இந்திய அரசியலில் நிதானத்திற்கும், கண்ணியத்திற்கும் பெயர் பெற்றவருமான ஜி.கே.மூப்பனாரின் நினைவிடத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அவரது அரசியல் நாகரிகமும், கூட்டணி தர்மத்தை காத்த பாங்கும் இன்றைய அரசியலுக்கு தேவையான பாடம் என அவர்கள் நினைவுகூர்ந்தனர்.

இதேபோல் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் மூப்பனாரின் நினைவிடத்தில் திரண்டு மரியாதை செலுத்தினர்.

தந்தையின் வழியில் தமிழக மக்கள் பணியை தொடர்ந்து முன்னெடுப்போம் என அப்போது ஜி.கே.வாசன் உறுதிபட தெரிவித்தார்.

மூப்பனாரின் பொதுவாழ்வு குறித்தும் அவர் ஆற்றிய அரும்பணிகள் குறித்தும் தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.

Hindusthan Samachar / vidya.b