Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வருகை தந்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் திருச்சி விமான நிலையத்தில் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
தமிழக வெற்றி கழக அரசு தொடர்வதற்கு ராகுல் காந்தி முழுமையான ஆதரவை அளித்துள்ள நிலையில் இந்த அரசு ஐந்து வருடம் தொடர்ச்சியாக ஆட்சியினை நிறைவு செய்யும்.
மக்களுக்கான நல திட்டங்களை தொடர்ந்து வழங்கும் இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
சட்டமன்றம் என்பது ஒரு விவாதம் நடத்துகின்ற மன்றம் மக்களுடைய பிரச்சனைகளை தான் சட்டமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளோம்.
பிரச்சனைகளை ஜனநாயக முறையில் எடுத்துரைக்க தான் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சட்டமன்றம் என்பது கண்ணியம் காக்கப்படுகின்ற மன்றமாக தான் இருக்க வேண்டும், மாண்புகளை மரபுகளையும் சட்டமன்றத்தில் தலைவர் கன்னியத்துடன் காப்பாற்றுகிறார், காப்பாற்றுவார், காப்பாற்றப்படும் என்ற நடைமுறையை தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டும்.
2001 முதல் 2006 வரை 8000 முதல் 9 ஆயிரம் வரை உதவி பேராசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டனர். 52 முறை போராட்டம் நடத்தியுள்ளனர் உதவி பேராசிரியர்கள் சிறை வைக்கப்பட்டனர். அதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் விஜய் ஆட்சியில், தமிழக அரசு மாதம் ஒன்றுக்கு உயர் கல்வித் துறையில் 19 கோடி விதம் விடுவிக்கப்பட்டுள்ளது. பணி மூப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளோம்.
விரைவில் 6000 பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.
மூன்று கட்டமாக இந்த தேர்வினை நடத்தப்பட உள்ளோம், இந்த அரசு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நலனில் அக்கறையுள்ள அரசாக உள்ளது.
எங்களுடைய பிரதமர் வேட்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் அகில இந்திய காங்கிரஸ் பற்றி முன்னாள் தலைவர் எங்கள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்திப்படுவார்.
அத்துடன் மட்டுமல்ல 15 ஆண்டுகளாக மக்கள் வெறுப்பில் மோடி அரசின் மீது மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் ராகுல் காந்தி தான் பிரதமர், அதற்கு நாங்கள் முழுவதுமாக ஒத்துழைப்போம் என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN