Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட விசிக நிர்வாகிகள் இல்ல நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை புரிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி அவர்கள், திருச்சிராப்பள்ளி சர்வதேச விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டதை ஏற்புடையது அல்ல, மீண்டும் அவருக்குரிய பாதுகாப்பும் முழுமையாக வழங்கப்பட வேண்டும். அதனை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தோழமைக் கட்சிகளை காயப்படுத்தாத வகையில் அரசு செயல்பட வேண்டும்.
பொது தொகுதியில் தலித்துகளை நிற்க வைப்பது இயல்புதான்.
இதனை தவறாக பேசியதாக வன்னியரசு மீது கேள்வி எழுப்பி உள்ளனர்.
இது இரக்கப்பட்டு நிற்க வைப்பது போன்ற தொணி உள்ளது. அதனை செய்யக்கூடாது என்ற வகையில் தான் வன்னிஅரசு பேசியுள்ளார்.
வன்கொடுமை தடுப்புச் சட்டம் இந்தியா முழுவதும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. அவ்வாறு செயல்படுத்தப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பது அதிகாரிகள் கருத்து.
நாங்கள் ஆளுங்கட்சியுடன் அங்கம் வகிக்கின்ற நிலையில் அரசிடம் பல்வேறு கருத்துகளையும் கோரிக்கைகளையும் முன்வைப்போம்.
தலித் மக்கள் மேம்படுத்துவதற்கு சட்டப்படி என்ன நடவடிக்கைகள் செய்ய வேண்டுமோ அதனை செய்வோம் என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN