Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
வேலூர் வடக்கு மாவட்ட திமுக காட்பாடி தொகுதி சார்பில், முன்னாள் முதல்வர்
கருணாநிதி அவர்களின் நினைவேந்தல் பொதுக்கூட்டம் காட்பாடி, சித்தூர் பேருந்து
நிறுத்தத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்பு செயலாளர்
ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று பேசினார்.
பொதுக்கூட்ட முடிவில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது;
முதலமைச்சர் விஜய் அடுத்த பிரதமர் என தவெக- வினர் பேசி வருவது குறித்த கேள்விக்கு, அவர் ஐநா சபைக்கு கூட தலைவராக வரலாமேனு சொல்லுவார்கள்.
கற்பனைக்கு எல்லையே
கிடையாது. அவர்கள் என்ன வேணா நினைக்கட்டும். அவர் பிரதமராக வரவேண்டும் என
சொன்னாலே ராகுல் காந்தி பிரதமர் இல்லை என முடிவு பண்ணிட்டாங்க இல்லையா? ராகுல்காந்தி பிரதமர் இல்லை என அவங்க முடிவு பண்ணிட்டாங்கனு சென்னா காங்கிரஸ் காரர்களுக்கு சொரணை இருந்தால் வெளியே வரட்டும்.
இல்லை இல்லை அவர்தான் பிரதமர் என்றால் இவர்களும் கூஜா தூக்கட்டும் என்றார்.
இன்றைக்கு பிற்படுத்தப்பட்டோர் மானிய கொள்கை விளக்கத்தில், பெரியார், அம்பேத்கர், நேரு உள்ளிட்டவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமை இந்த மூன்று பேர் இல்லை என்றால் போயிருக்கும். இதற்கு 1950இல் ஆபத்து வந்த போது அதை தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர்,
அண்ணா போராடி எதிர்த்தார்கள். இன்றைக்கு உள்ள தலைமுறை இதை தெரிந்து கொள்ளனும்.
அந்தப் போராட்டத்தின் விளைவு காரணமாக முதல் அரசியல் அமைப்புச் சட்டத்தின் போதே திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதனால் தான் ஒவ்வொரு முறையும்
பிற்படுத்தப்பட்டோர் மானிய கோரிக்கையின் போது பெரியார், அம்பேத்கர், நேரு ஆகிய மூன்று பேரின் பெயர்கள் கண்டிப்பாக இடம் பெற்று இருக்கும். ஆனால் இந்த வருடம் இல்லை, பெரியார் படத்தையும் அம்பேத்கர் படத்தையும் போட்டு ஏமாற்றுகிறார் விஜய்.
சட்டமன்றத்தில் தற்போது நேரலை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகளை
சரியாக காட்டுவதில்லை என குற்றச்சாட்டுகள் உள்ளது குறித்து கேட்டதற்கு,
இதையெல்லாம் சட்டமன்றத்திலேயே எங்களுடைய எதிர்க்கட்சித் தலைவர்
எழுப்பியிருக்கிறார்.
அவர்கள் காட்டவில்லை என்றாலும் பொதுமக்கள் பார்த்துக்
கொண்டுதான் இருக்கிறார்கள். இதையெல்லாம் உங்களைப் போன்ற ஊடகங்கள் தான் வெளியிடவேண்டும். மேலும் ஒரு தவறான தோற்றத்தை உருவாக்கு வேண்டும் என்ற எண்ணத்தில்
செய்கிறார்கள் நிச்சயம் இதெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள
மாட்டார்கள்.
ஜல்லிக்கட்டு விழாவால் இளைஞர்கள் சீரழிவதாக சோழவந்தான் எம் எல் ஏ
பேசியிருந்தது குறித்து கேட்டதற்கு, அந்தப் பகுதி இளைஞர்களே நல்ல பதில் சொல்லுவாங்க என்றார்.
இன்று ஒரு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது குறித்து கேட்டதற்கு, இதைத்தான் நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். நல்ல மாட்டுக்கு
ஒரு சூடு, நல்ல மனுஷனுக்கு ஒரு சொல். மாடா மனுசனான்னு அவங்க முடிவு
பண்ணிக்கட்டும்.
சட்டமன்றத்தில் தவறான தகவலை கூறினால் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியிருந்தது குறித்து கேட்டதற்கு, அவர் பல
ஆண்டுகால அனுபவம் உள்ளவர் அவர் சொன்னால் சரியாக தான் இருக்கும். இதை
சட்டத்துறை சார்ந்தவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
சட்டமன்றத்தில் சபாநாயகரின் செயல்பாடு எப்படி உள்ளது என்று கேட்டதற்கு, ஜே சி
டி பிரபாகரன் என்னுடைய கல்லூரி நண்பர் என்னோடு படித்தவர் அதனால் அவரைப்பற்றி அதிகமா சொல்ல விரும்பவில்லை என கூறினார்.
முதலமைச்சர் விஜய்
சட்டசபையில் திமுகவை பார்த்து சவால் விடுகிறார் மூன்று பைல்களை அவிழ்த்து
விடுவேன் என, அவிழ்ப்பது தானே உங்கள் வேலையை அவிழ்த்து பாருங்கள். ஒரு எழவும் தெரியாதவன் தான் இன்று மந்திரியாக உள்ளான்.
நீ மூன்று பைலை ஆவிழ்த்தால் நானும் மூன்று விஷயத்தை அவிழ்ப்பேன், இன்றைக்கு
ஊழலே முதல்வர் அறையில் இருந்து தான் தொடங்கியுள்ளது.
இவற்றையெல்லாம் நாங்களும் கையில் எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam