வடநெம்மேலி பாம்புப் பண்ணையில் பார்வையாளர் கட்டணம் உயர்வு
சென்னை, 30 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை அடுத்த மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற வடநெம்மேலி பாம்புப் பண்ணையில் பார்வையாளர்களுக்கான நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தொழில் வணிகத்துறை சார்பில் இயங்கி வர
Visitor fee hiked at North Nemmeli Snake Park.


சென்னை, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை அடுத்த மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற வடநெம்மேலி பாம்புப் பண்ணையில் பார்வையாளர்களுக்கான நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் தொழில் வணிகத்துறை சார்பில் இயங்கி வரும் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்தின் கீழ் இந்த பண்ணை செயல்பட்டு வருகிறது.

இங்கு நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், கட்டு விரியன் உள்ளிட்ட விஷப் பாம்புகளில் இருந்து விஷம் எடுக்கப்பட்டு மருந்து தயாரிப்புக்கு அனுப்பப்படுகிறது.

பாம்பு விஷம் எடுக்கும் முறையை நேரில் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் தினமும் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் பண்ணையின் பராமரிப்புச் செலவு மற்றும் நிர்வாகச் செலவுகளைக் கருத்தில் கொண்டு நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பெரியவர்களுக்கு 20 ரூபாயும், சிறியவர்களுக்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

தற்போதைய கட்டண உயர்வின்படி பெரியவர்களுக்கு ரூ.50 ஆகவும், சிறுவர்களுக்கு ரூ.25 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக பண்ணை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b