Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் அமராவதி அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன வசதிக்காக இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அனுமதி ஆணையில், இன்று முதல் வரும் செப்டம்பர் 7-ம் தேதி வரை 8 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால், அமராவதி அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்து மேலும் 4 நாட்களுக்கு வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த தண்ணீர் திறப்பால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமராவதி ஆற்றின் கீழ் உள்ள பழைய வாய்க்கால்களின் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 25,250 ஏக்கர் நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெறும்.
Hindusthan Samachar / vidya.b