திருவள்ளூர் அருகே லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
திருவள்ளூர், 30 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை அடுத்த கொடுங்கையூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் லோகநாதன் (42), மனைவி பூங்கொடி( 39), மகள் தனலட்சுமி (10), மாமியார் ராதா (65), மைத்துனர் மகன்கள் கோகுல்(10), பிரசாந்த் (15 ) ஆகியோர் நேற்று இரவு பெரியபாளையம் கோயி
auto-rickshaw collided with a lorry near Tiruvallur.


திருவள்ளூர், 30 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை அடுத்த கொடுங்கையூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் லோகநாதன் (42), மனைவி பூங்கொடி( 39), மகள் தனலட்சுமி (10), மாமியார் ராதா (65), மைத்துனர் மகன்கள் கோகுல்(10), பிரசாந்த் (15 ) ஆகியோர் நேற்று இரவு பெரியபாளையம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய, ஒரே ஆட்டோவில் நேற்று நள்ளிரவில் வந்துள்ளனர்.

அப்போது, லோகநாதன் ஆட்டோவை ஓட்டிக் கொண்டு வந்தபோது, பன்பாக்கம் அருகே உள்ள மாநகரப் பேருந்து நிறுத்தம் அருகே, முன்னாள் சென்ற லாரி மீது ஆட்டோ மோதி குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநரின் மனைவி பூங்கொடி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு அருகே உள்ள பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மாமியார் ராதா, மைத்துனர் மகன் கோகுல் ஆகிய இருவரும் அடுத்தடுத்து பலியாகினர்.

மேலும் விபத்தில் பலத்த காயம் அடைந்த 3 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், விபத்தில் பலியான 3 பேரின் சடலங்களை கைப்பற்றிய பெரியபாளையம் காவல் நிலைய போலீஸார் உடற்கூறாய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து, பெரியபாளையம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பெரியபாளையம் கோயிலுக்கு வழிபாட்டிற்காக வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர், விபத்தில் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b