Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 24 வயதான ஏசி மெக்கானிக் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் திவாகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு அதே பகுதியில் ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்து வரும் திவாகர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வீரப்பன்சத்திரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் தீவிர விசாரணையின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான திவாகரை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b