Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
சட்டப்பேரவையில் இருக்கை மாற்றம் என்பது வழக்கமான நிர்வாக நடைமுறையின் ஒரு பகுதிதான் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவர் நியமிக்கப்பட்டதன் காரணமாகவே இருக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் அமர்வை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் மேற்கொண்டுள்ள இந்த இருக்கை மாற்றத்தை வரவேற்பதாகவும் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
வழக்கமான இருக்கை மாற்றத்தை வைத்து இல்லாத அரசியல் அர்த்தங்களை கற்பனை செய்து பரப்ப வேண்டாம் என்றும், செய்தியை செய்தியாகவே பார்க்க வேண்டும்,அரசியலை கற்பனையாக உருவாக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P