Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவையில் இன்று மின் கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சி தொடர்பான முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.
மாநிலத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மின் தொடர் அமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.
இதன் முக்கிய அங்கமாக சென்னை மாநகரின் அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிக்கவும், தடையில்லா மின்சாரம் வழங்கவும் ரூபாய் 1762 கோடி மதிப்பீட்டில் சென்னை மின் பகிர்மான மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் பழைய மின் கம்பிகள் மாற்றியமைக்கப்பட்டு, புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு, மின் இழப்பு வெகுவாக குறைக்கப்படும்.
மேலும், தமிழகத்தை தொழில்நுட்ப தலைநகரமாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் ரூபாய் 175 கோடி செலவில் அதிநவீன செமி கண்டக்டர் பூங்கா அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார். இந்த பூங்கா இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, உலகளாவிய முதலீடுகளையும் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் கொங்கு மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில், கோவையில் ரூபாய் 400 கோடி மதிப்பில் பிரமாண்ட டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b